வருடந்தோறும் ஜிக்யூ இதழ் செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் சினிமா, தொழில், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த 40 வயதுக்கு உட்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும்.
2018-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் நடிகர்கள் பா இரஞ்சித், நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, பார்வதி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல ஸ்டீரியோடைப்களைத் தவிர்த்து திரைப்படங்களை இயக்குவதற்கும் தலித் மக்களின் வாழ்க்கையைப் பேசுவதற்காகவும் இயக்குநர் ரஞ்சித் தேர்வு செய்யப்பட்டதாக ஜிக்யூ தெரிவித்துள்ளது. அத்துடன் சாதிய எதிர்ப்பு இயக்கத்துக்காக ரஞ்சித் முன்னெடுக்கும் முயற்சிகளையும் ஜிக்யூ பாராட்டியுள்ளது.
அதேபோல மலையாளத் திரையுலகில் நிலவும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுக்கும் பார்வதியைத் தாங்கள் கவுரவிக்கிறோம் என்று ஜிக்யூ இதழ் தெரிவித்துள்ளது.
டாப்ஸி பன்னு, ஆலியா பட் மற்றும் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.