full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பா.இரஞ்சித் வழங்கும் கானா இசை நிகழ்ச்சி

முதன் முறையாக கானா இசையுடன் ராப் மற்றும் ராக் இசையும் இணைந்து புதுவித இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

சென்னையின் கானா இசைக்கலைஞர்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள். இதுவரை கானா மட்டும் பாடிக்கொண்டிருந்த நம் இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய ஆப்பிரிக்க இசைகளான ராப், ராக் இசையோடு இணைத்து ஒரு புதிய இசை அனுபவத்தை சென்னை மக்களுக்கு தரவிருக்கிறார்கள்.

இசைக்கலைமூலமாக புரட்சியும், விடுதலையும் பெற முடியும் என்பதற்கு ஆப்பிரிக்க இசைக்கலைஞர்களை உதாரணத்திற்கு சொல்வார்கள். பல புரட்சிகளுக்கு பாடல்களும், இசையும் பெரும் துணைபுரிந்துள்ளன. அந்த வகையில் நம் கானா இசையின் பெருமையை எந்த மேடைகளும் அலங்கரித்ததில்லை. முதன் முறையாக உலகம் முழுவதும் கானா இசையை கொண்டு சேர்க்கும் முயற்சியை இயக்குனர் பா இரஞ்சித் துவக்கியிருக்கிறார்.

இதன் முதன் மேடையிலே மேற்கத்திய இசைகளோடு இணைந்து சென்னையில் வரும் ஜனவரி 6ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சிக்கு எந்த கட்டணமும் இல்லை.

இந்த நிகழ்ச்சியினை இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மெட்ராஸ் மியூசிக் வழங்குகிறது.