பல போராட்டங்கள், பெரிய கலவரங்கள், உயிரிழப்பு என பலத்த சர்ச்சைகளுக்கிடையே பத்மாவத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்திருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாகி, 4 நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளது.
இந்நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது.
இதுதொடர்பாக தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறுகையில், பத்மாவத் திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மலேசியாவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தணிக்கை வாரியத்தின் தடையை எதிர்த்து வினியோகஸ்தர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
ஆனால், சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்காமல் திரையிட பாகிஸ்தான் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.