ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ், ERIN MORIARTY, BARKHAD ABDI, FERARD JUGNOT உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு -ஆங்கில படம் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’. இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தனுஷின் ‘பக்கிரி’ எப்படி?
இந்தியாவில் உள்ள மும்பையில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ்! தனது அப்பா யார் என்று தெரியாத நிலையில் அம்மாவுடன் வாழ்ந்து வரும் தனுஷ், சில மாயாஜால தந்திரங்களை கற்று மும்பை தெருக்களில் ‘மந்திரவாதி’ என்று அழைக்கப்படும் மாயாஜால வித்தகராக வலம் வருகிறார். இந்நிலையில் தனுஷின் தயார் திடீரென்று இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து தனது தயாரின் ஆசைப்படி தனது தந்தையை தேடி பாரீஸுக்கு செல்கிறர் தனுஷ்! பாரீஸில் எரின் மோரியார்டி என்ற பெண்ணை சந்திக்கிறர் தனுஷ்! எரின் மோரியார்டிக்கு தனுஷின் திறமைகள் பிடிக்க, அவரால் ஈர்க்கப்படுகிரர் தனுஷ்! இதனை தொடர்ந்து பாரிஸில் தனுஷ் செய்யும் சில காரியங்கள், அவருக்கே வினையாக மாற, லண்டன் ரோம், இத்தாலி, லிபியா என்று தொடர்ச்சியாக பல நாடுகளுக்கு தனுஷ் பயணம் செய்ய வேண்டியதாக வருகிறது! அந்த பயணங்களில் தனுஷ் சந்தித்த பிரச்சனைகள், அவருக்கு ஏற்பட்ட சில நல்ல அனுபவங்கள், அதனை தொடர்ந்து தனுஷால் அவரது தந்தையை கண்டு பிடிக்க முடிந்ததா? என்பதே மீதி படம்!
சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட மூன்று சிறுவர்களிடம் தனது ‘ஃப்ளாஷ் பேக்’குகளை தனுஷ் விவரிக்க துவங்குவதிலிருந்து ஆரம்பமாகிறது படம்! அதன் பிறகு கதை பாரிஸுக்கு செல்கிறது. அங்கு தனுஷை விரும்பும் பெண், அவரை சந்திக்க ஈஃபிள் டவர் அருகே வருவதாக சொன்ன தனுஷால் அங்கு செல்ல முடியாமல் போக, அதை தொடர்ந்து அவர் லண்டன் பயணிக்க, அங்கு பிரபலமான நடிகை ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பம் தனுஷுக்கு ஏற்பட, அவரால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் தனுஷுக்கு அந்த பணமே வில்லனாக மாற… கடைசியில் தனுஷ் என்ன செய்கிறார் என்பதை இயக்குனர் கென் ஸ்காட் காட்சிகளாக்கிய விதம் ரசிக்க முடிகிறது. மும்பை, பாரிஸ், லண்டன், இத்தாலி லிபியா என்று பயணிக்கும் கதையில் அந்தந்த நாடுகளை காட்சிகளாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மத்தியாஸின் பணி பாராட்டும்படி அமைந்துள்ளது. அதைப் போல NICOLAS ERRERA, AMIT TRIVEDI ஆகியோரின் இசை, நம்மை கதையுடன் இனிமையாக பயணிக்க வைக்கும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது.
குறுகிய நேரமே (100 நிமிடங்கள்…) ஓடும் படம் என்றாலும் கதை கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பது போன்ற உணர்வை தருவது படத்தில் மைனஸாக அமைந்துள்ளது. ஆனால் அந்த குறையை தனுஷ் உட்பட படத்தில் நடித்திருக்கும அத்தனை பேரின் சிறந்த நடிப்பும், சுவாரஸ்யமான காட்சிகளும் மறக்க செய்து விடுகிறது!
தந்தை யார் என்று தெரியாமல் வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், இனிமையான அனுபவங்கள், அவரது மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நல்ல ஒரு அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்!