full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மிஷ்கினை எனக்கு பிடிக்காது: பாண்டிராஜ்

மிஷ்கின் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷால், பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குனர் மிஷ்கின், சிம்ரன் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குனர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இதில் பாண்டிராஜ் பேசும்போது, ‘இயக்குனர் மிஷ்கினை பார்த்தால் எனக்கு பிடிக்காது. மண்டகரமாக பேசுவார். ஆனால், அவருடன் பழகி பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர் எவ்வளவு நல்லவர் என்று. அவர் குழந்தை மாதிரி. உண்மையாக குழந்தைதான். விஷாலுக்கு இப்படம் முக்கியமான படம். விஷால் ரொம்ப நல்லவர். இவருக்காகத்தான் தயாரிப்பாளர் தேர்தலில் நின்றேன். வேறு எதற்காகவும் நிற்கவில்லை. ‘துப்பறிவாளன்’ படத்தின் தீம் மியூசிக் சிறப்பாக உள்ளது. படமும் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

தயாரிப்பாளர் நந்தகோபால் பேசும்போது, ‘விஷால், காமராஜ் போன்றவர். நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர். அவருடைய ஆசைகள் நிறைவேற வேண்டும்’ என்றார்.

சுசீந்திரன் பேசும்போது, ‘விஷால் சிறந்த உழைப்பாளி. 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் வேலை பார்க்க கூடியவர்கள். இவருடைய உழைப்பு வீணாகாது’ என்றார்.