ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி ‘பன்றிக்கு நன்றி சொல்லி’
இத்திரைப்படத்தின் கதைகளம் தமிழ் திரையுலகில் அரிதான ‘புதையல் வேட்டையை’ மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
முழுக்க முழுக்க நகைச்சுவையோடு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இதுவரை அணுககப்படாத விலக்கப்பட்ட அல்லது இருண்ட காமெடி வகையை சார்ந்தாலும், ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கப்பட்கி இருக்கிறார் இயக்குனர் பாலா அரன்.
ஒரு நல்ல கதைகளத்திற்கு உரிய வரவேற்பையும், ஆதரவையும் தமிழ் திரையுலகம் எப்போதும் தந்து வந்திருக்கிறது என்பதால் இப்படம் முழுவதுமே புதுமுகங்கள் வலம் வருகின்றனர்.
இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்-சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், பாலா அரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை, ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
நிஷாந்த்
விஜய் சத்யா
செல்லா
பாலாஜி
மு சந்திரகுமார்
வியன்
பாஸ்கர்
தயாரிப்பு: ஹெட் மீடியா ஒர்க்ஸ்’ விக்னேஷ் செல்வராஜ்
இணை தயாரிப்பு: வியன், கார்த்திக் பார்த்தசாரதி
ஒளிப்பதிவு: விக்னேஷ் செல்வராஜ்
படத்தொகுப்பு: ராம் – சதீஷ்
இசை: சுரேன் விகாஷ்
இசை வடிவம்: சிவக்குமார்
கதை, திரைகதை, வசனம், இயக்கம்: பாலா அரன்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்