full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிஷ்யனை வாழ்த்திய பேரன்புக்காரர்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரித்துள்ள முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ராமின் உதவியாளராகப் பணியாற்றிவர். 

தனது சிஷ்யப் பிள்ளையினுடைய முதல் திரைப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் இயக்குநர் ராம் கூறியிருப்பதாவது,

“2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் தெரிந்த என் தோழமை அவன். என் முதல் மகன் அவன். அவனுடய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் “பரியேறும் பெருமாள்”. மாபெரும் சபைகளில் உனக்கு மாலைகள் விழ வேண்டும் செல்வம். விழும்.

அட்டக்கத்தி தமிழ் திரையுலகம் கண்டிராத மனிதர்களை வெளியை முதன் முதலில் காட்சிப் படுத்திய படம். திரை மொழியில் தனக்கென ஒரு விதத்தை உருவாக்கிக் கொண்ட படம். பா.ரஞ்சித்தை அறிமுகப்படத்திய படம். அட்டகத்தியின் வெற்றியே இன்று நீலம் என்ற தயாரிப்பு நிறுவனமாய். சக படைப்பாளியை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு தன்னுடைய வெற்றியை இடத்தை பங்கு கொடுப்பதும் பண்பட்ட படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அப்படியாய்ப்பட்ட ஒரு கலைஞன் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள். வாழ்த்துக்கள்” என்று பதிவு செய்திருக்கிறார்.