full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “பரியேறும் பெருமாள்” டீசர்!!

“நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம்   இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

“மதயானைக் கூட்டம்”, “கிருமி” போன்ற படங்களில் நடித்து அசத்திய நடிகர் கதிர், இப்படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் “கயல்” ஆனந்தி, யோகி பாபு, “கபாலி” லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “கருப்பி என் கருப்பி” என்ற பாடலும், “எங்கும் புகழ் துவங்க” என்ற பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலைலையில் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, இரண்டு பாடல்கள் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பினால் ரசிகர்கள் இப்படத்தின் டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.