full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்..!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 
 
படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். 
 
இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டது. பல ஊர்களிலும் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.