கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.
ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டம் இன்று மாலை ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த தகவலை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.