full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினி, கமல் இருவரையும் வரவேற்கிறேன் – ரா.பார்த்திபன்!

சமீபத்தில் நடிகர் பார்த்திபன், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரையும் அடுத்தடுத்து சந்தித்து பேசினார். ரஜினி, கமல் இருவருமே தீவிரமாக அரசியல் செய்து வரும் இந்த நேரத்தில் அவர்களை பார்த்திபன் சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

பலவேறு பிரபலங்களும், நடிகர்களும் ரஜினி மற்றும் கமலுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் போது பார்த்திபன் இருவரையும் சந்தித்ததன் பின்னணி குறித்து பலவாறாக பேசப்பட்டது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பார்த்திபன் கூறியுள்ளாதவது,

“கமல், ரஜினி என இருவரும் வருவதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், அவர்கள் சம்பாதித்த பணம் முழுவதும் சினிமாவில் சம்பாதித்தது கிடையாது. இந்தச் சமூகத்தில் சம்பாதித்ததுதான். எல்லா சினிமா டிக்கெட்டுகளும், அதன்மூலம் பெற்ற ஒவ்வொரு பைசாவும் இந்தச் சமூகத்தின் பணம். அதுதான், சம்பளமாக அவர்கள் கைக்கு போய் சேர்ந்திருக்கு. குடித்த தாய்ப்பாலுக்கு நன்றி சொல்றமாதிரி, இந்த சமூகத்துக்கு அவங்க ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறாங்க. இவர்களின் இந்த செயலை, இரண்டு கைகள் ஏந்தி நாம வரவேற்கணுமே தவிர, அதில் குற்றம், குறைகள் சொல்லக் கூடாது. இது என் அபிப்ராயம்.

அதற்குப் பிறகு அவர்கள் தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும், இல்லை ஜெயிக்க முடியாமல் போகட்டும். இவ்வளவு நாள் அவர்களுக்கு இருந்த புகழை வைத்துக்கொண்டு ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் இதற்கு மேல் பணம், புகழ் சம்பாதிக்க வேண்டியதில்லை. தேவையான அளவு சம்பாதித்துவிட்டார்கள்” என்றார்.