ஆதி, யோகிபாபு, ஹன்ஷிகா, பாலக் லால்வானி, ஜான் விஜய், ரோபோ ஷங்கர், தங்கதுரை, ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் தயாநிதி இசையில் மனோஜ் தோமோதரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பாட்னர்.
பாட்னர் ட்ரைலர் காட்சி நம்மை மிகவும் ரசிக்க வைத்தது அதுபோல நகைசுவை காட்சிகள் நம்மை அதிரவைத்தது இது போல நம்மை சிரிக்க வைத்ததா இல்லை அழவைத்ததா என்று பார்ப்போம் .
கடன் பிரச்சனையால் தனது நண்பர் யோகி பாபுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் நாயகன் ஆதி. அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் சிப்பை கொள்ளையடித்தால் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் சிப்பை எடுக்க ஆதியும், யோகி பாபுவும் செல்ல, பாண்டியராஜனின் கண்டுபிடிப்பால், யோகி பாபு, ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவரை மீண்டும் யோகி பாபுவாக மாற்றுவதற்காக பாண்டியராஜனை தேடிப் போக, அவர் அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இருவரும் அவற்றை எப்படி சமாளித்தார்கள், மீண்டும் ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘பார்ட்னர்’ படத்தின் கதை.
காமெடி நடிகர்களுடன் நடிப்பது ஆதிக்கு புதுசு இல்லை ஏற்கனவே பழகிய ஒன்று தான் ஆகவே தன பங்கை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.
படத்தின் மையப்புள்ளியே யோகிபாபு தான் இருந்தும் புதுசாக எதுவும் இல்லாமல் எப்பவும் போல உருவத்தை வைத்து நக்கல் கிண்டல் செய்து ரசிகர்களை சிரிக்கவைக்க முயற்சித்துள்ளார்.பெரிதாக எடுபடவில்லை என்று தான் சொல்லணும்.
நாயகி ஹன்சிகா படத்திற்கு கொஞ்சம் பிளஸ் என்று சொல்லலாம்.பெண்ணாக இருந்து ஆணாக மாறி நடிக்கும் காட்சிகளில் கொஞ்சம் சிறப்பாக நடித்து இருக்கிறார்.ஹன்சிகா நடிப்பு படத்துக்கு மிக பெரிய பிளஸ் அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி ஒரு பாடல், ஒரு சில காட்சிகள் என்று தனது கடமையை நிறைவாக செய்திருக்கிறார்.
ஜான் விஜய், ரோபோ சங்கர், தங்கதுரை, பாண்டியராஜன், ரவி மரியா, முனிஷ்காந்த், அகஸ்டியன் என அனைத்து நடிகர்களும் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் தான் பாவம்.
படத்தின் மிக பெரிய பிளஸ் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியும், கொண்டாடும் படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒரு ஆண் பெண்ணாக மாறியானால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வார்? என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியிருக்கும் இயக்குநர் மனோஜ் தமோதரன், நல்ல நட்சத்திரங்கள் தரமான தொழில் நுட்பக்கலைஞர்கள் கிடைத்தும்.மோசமான திரைக்கதை மூலம் படத்தை கோட்டை விட்டுவிட்டார். என்று தான் சொல்லணும் .
மொத்தத்தில், இந்த ‘பார்ட்னர்’ நமக்கு கை கொடுக்கவில்லை .