full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மம்மூட்டி ரசிகர்களுடன் பார்வதி மோதல்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “கஸாபா”. இந்தப் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் படி மலினமான
வசனங்களை மம்மூட்டி பேசியுள்ளதாக நடிகை பார்வதி விமர்சித்துள்ளார்.

நடிகை பார்வதி மலையாள பட உலகின் முன்னணி நாயகியாக இருப்பவர். தமிழில் பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது கேரளாவில்
நடபெற்று வரும் International Film Festival Of Kerala2017 இல் ‘Women in Cinema Collective’ குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

நடிகர் மம்மூட்டி குறித்து இவர் தெரிவித்துள்ளதாவது,

“சினிமா மிகப்பெரிய மீடியம். இங்கு பேசப்படும் எதுவுமே மிக விரைவில் மக்களை சென்றடைகிறது. அதிலும் குறிப்பாக பெரிய நடிகர்கள் எது செய்தாலும்
அது மிக மிக சீக்கிரமாக பரவுகிறது. அப்படியிருக்கையில் பொழுதுபோக்கிற்காக அவர்கள் செய்யும் சில தவறான செயல்கள் சமுகத்தில் எதிரொலிக்கின்றன”
என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு மம்ம்மூட்டி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் சில ரசிகர்கள் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர்.
இதனால் கடுப்பான பார்வதி, எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். முக்கியமாக நான்கு நபர்கள் மீது டிஜிபி லோக்னாத் பெஹரா வழக்கு
பதிவி செய்து விசாரனை மேற்கொண்டுள்ளார்.

அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் மலையாள பட உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.