full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..!

திரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..

பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..!

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ்  இயக்கும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’..!

பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றி படங்களை தந்தவர்.

தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர்கள் எழுதிய “முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்” என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது.

முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் படக்குழுவினர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு  விரைவில் தொடங்கயுள்ளது.