பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம்
விக்ரம் பிரபு வாணி போஜன் டல்லி ஜனஞ்சேயா விவேக் பிரசன்னா வேலா ராமமூர்த்தி ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சாகரிசையில் கார்த்திக் அட்விக் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு
நாயகன் விக்ரம் பிரபு பார்வை மங்கலாக இருக்கும் அதாவது நல்ல வெளிச்சத்தில் கண் பார்வை நன்றாக தெரியும் இருளில் பார்வை பார்வை தெரியாது விக்ரம் பிரபு தன் அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கும்போது ஒரு மன நோயாளி பெண்ணை இருவர் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களை தடுத்து அடித்து துரத்துகிறார் விக்ரம் பிரபு இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு சில நாட்களில் மீண்டும் விக்ரம் பிரபுவை அவர்கள் தாக்குகிறார்கள் கடத்துகிறார்கள் மறுபடியும் அவர்களிடம் இருந்து தப்பித்து வருகிறார் விக்ரம் பிரபு இதைத் தொடர்ந்து அவரின் தந்தை கொலை செய்யப்படுகிறார் பின்னர் இவரையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்த கொலைகளை யார் செய்கிறார்கள் எதற்காக செய்கிறார்கள் என்பது தான் இந்த கதையின் புதிர்
இயக்குனர் கார்த்திக் அத்விக் இவருக்கு இது முதல் படம் லண்டனில் படித்துவிட்டு இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். முதல் முயற்சி முக்கோண முயற்சியா அல்லது முன்னேற்ற முயற்சியா என்பது ஒரு பெரிய கேள்வி குறியாக தான் இருக்கிறது
திரைக்கதையிலும் பின்னணி செயலும் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்து இருந்தால் நிச்சயமாக இது மிகப்பெரிய வெற்றி படமாக தான் இருந்திருக்கும் ஏற்கனவே பார்த்த காட்சிகள் பல காட்சிகள் இது அந்த படத்தில் பார்த்தோம் இது இந்த படத்தில் பார்த்தோம் என்று தோன்ற வைக்கும் காட்சிகளாக இடம் பெறுகிறது இதுவே இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் எடுத்துக் கொண்ட கரு கதைக்களம் வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதை மூலம் கோட்டை விட்டுவிட்டார்.
விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் சண்டைக் காட்சிகளில் மிக அற்புதமாக பணி புரிந்திருக்கிறார் ஒரு பார்வை குறைவானவன் எப்படி செயல்படுவான் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி வாணி போஜன் இவன் மேனேஜராக வரும் இவர் விக்ரம் பிரபு உடன் மோதலில் காதல் ஏற்படுகிறது அந்த மோதலும் அந்த அளவுக்கு வலுவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல வாணி போஜன் ரசிக்கும் படியாக இல்லை இயக்குனர் சொன்ன வேலையில் அப்படியே செய்திருக்கிறார் தவிர அவரின் வெளிப்பாடு என்பது பெரிதாக இந்த படத்தில் தெரியவில்லை
வில்லன் தனஞ்செயா படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும் தனக்கு கொடுத்த வேலையை மிக அற்புதமாக செய்திருக்கிறார் காட்சிக்கு காட்சி அற்புதமான ஒரு வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு ரவுடியாகவும் சரி ஒரு அரசியல்வாதியாகவும் சரி தன் நடிப்பை மிக கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
வேலா ராமமூர்த்தி ஆனந்த் சுபாஷினி விவேக் பிரசன்னா இவர்கள் அவர்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள் பொதுவாகவே பிரசன்னாவை எல்லா படத்தில் ரசிக்கும்படியாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் அவருக்கு அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் மேலும் ஒரு மைனஸ் என்று சொன்னால் இசையமைப்பாளர் சாகர் பின்னணி இசைகள் நம் காதல் பூசுகின்ற அளவுக்கு பின்னணி இசை கொடுத்திருக்கிறார் படத்திற்கு மிகப்பெரிய ஆறுதல் என்று சொன்னால் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.
மொத்தத்தில் பாயும் ஒளி நீ எனக்கு ஒருமுறை பார்க்கலாம்