அன்று அய்யா பிலிம் நியூஸ் ஆனந்தன், இன்று திரு.பெருதுளசி பழனிவேல்!!

News
0
(0)

தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் மரியாதைக்குரிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திகள் அனைத்தும்
“சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் வருடாவருடம் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியாவான பிலிம் நியூஸ்
ஆனந்தன் கடந்த வருடம் காலமானார்.

அவருடைய மறைவுக்குப் பிறகு யார் அந்த சேவையைத் தொடர்வது என்கிற கேள்வி எழுந்தது. அந்த வருத்தத்தை தென்னிந்திய சினிமா மக்கள் தொடர்பாளர்கள்
சங்கத்தின் முன்னாள் செயலாளரான, பெரு.துளசி பழனிவேல் போக்கினார்.

சென்ற வருடத்தில் வெளியான திரைப்படங்கள், திரையுலக நிகழ்வுகள், உதிர்ந்து போன நட்சத்திரங்கள் என பலவிதமான சினிமா செய்திகளைத் தொகுத்து இந்தாண்டு ஜனவரி மாதமே ஒரு புத்தகமாகவே வழங்கியிருந்தார்.

தற்போது, இந்த ஆண்டின் ஆறு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்த ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும்
“துளசி சினிமா நியூஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார். அனைத்துத் தரப்பினருக்கும், அந்த புத்தகத்தை இலவசமாக வழங்கி திரையுலகப்
பத்திரிகையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.