பெட்ரோமாக்ஸ்; விமர்சனம் 3/5

Reviews

தமன்னா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ‘பெட்ரோமாக்ஸ்’.

படத்தின் ஆரம்பத்திலேயே தமன்னாவோடு சேர்ந்து நான்கு பேர் ஒரு பெரிய பங்களாவில் பேயாக வாழ்ந்து வருகின்றனர். அந்த பங்களாவை விற்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ப்ரேம்.

இது தாங்கள் வாழ்ந்த வீடு இதை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று கூறி அந்த பங்களாவை வாங்க வரும் அனைவரையும் பயமுறுத்தி துரத்தி விடுகின்றனர் அந்த நான்கு பேய்களும்.

அந்த பங்களாவில் நான்கு பேரை தங்க வைத்து, அவர்கள் உயிரோடு திரும்பி வந்தால் அதை பார்த்து பங்களாவை வாங்கி விடுவார்கள் என்ற எண்ணத்தில், முனிஸ்காந்த், காளி வெங்கட், டி எஸ் கே, சத்யன் என்ற நால்வரும் அந்த பங்களாவில் மூன்று நாட்கள் தங்க திட்டம் போடுகின்றனர்.

அந்த நான்கு பேய்களிடம் இருந்து இந்த நால்வரும் தப்பித்தார்களா இல்லையா..??
தமன்னா யார் எப்படி இறந்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

தமன்னா இப்படத்தில் ஹெஸ்ட் ரோலில் நடித்து சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவான சிறிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். ஏன்டா இந்த சோதனை என்று செல்லும் அளவிற்கு முதல் பாதி செல்கிறது. இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் முனிஸ்காந்த், டி எஸ் கே, சத்யன், மற்றும் காளி வெங்கட், யோகி பாபு, மைனா இவர்கள் அனைவரும் அடிக்கும் லூட்டிகள் திரையரங்குகளில் சிரிப்பலைகளை சிதற வைத்திருக்கிறது.

க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் காட்சிகள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இயக்குனர் ரோஹின் வெங்கடேசன், இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வைக்கப்பட்ட ஓட்டத்தை படம் முழுக்க வைத்திருந்தால் படத்திற்கு சற்று பலமாக அமைந்திருக்கும்.

டேனி ரேமண்ட் – ஒளிப்பதிவு காட்சிகளில் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.

ஜிப்ரானின் பின்னனி இசையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்…

படத்தை திரையரங்கிற்கு சென்று நிச்சயம் ஒருமுறை பார்த்து வரலாம் என்ற மனப்பாங்கு நமக்கு வருகிறது.

பெட்ரோமாக்ஸ் – இன்னும் கொஞ்சம் ப்ரைட்டா வெளிச்சத்தை கொடுத்திருக்கலாம்.