full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.

இதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

மலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.