ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ பொங்கல் தினத்தில் வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ரஜினியின் ‘பேட்ட’ வெளிவர இருப்பதால் விஸ்வாசம் பொங்கல் ரேசில் இருந்து விலகிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
மேலும், நவம்பர் மாதம் 29 ஆம் தேதி உலக சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.