காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது.
5-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் ஐபிஎல் போட்டி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா போட்டியை மாற்ற இயலாது என்றார். இதனால் நாளை திட்டமிட்டபடி போட்டி நடக்க இருக்கிறது.
இதற்காக வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும், மைதானத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை போட்டியை காணச்செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், பேனர்கள், பதாகைகள், கேமரா, செல்போன் எடுத்த வரக்கூடாது. இனவெறி தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பக்கூடாது. தேசிய கொடியை அவமதித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மைதானங்களை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பவார்கள் என பல கட்டுப்பாடுக்களை விதித்துள்ளது.
இதற்கு நடிகரும் இசையமைப்பாளரும் தனது சமூக வலைத்தளத்தில், ‘அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?’ என்று பதிவு செய்திருக்கிறார்.