full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நல்ல புரிதலை உண்டாகும் பிழை

நல்ல புரிதலை உண்டாகும் பிழை
Turning point நிறுவனம் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜனவரி 3ம் தேதி வெளிவரவுள்ள இருக்கும் திரைப்படம் பிழை படத்தின் தயாரிப்பாளர், நடிகரும், பாடலாசிரிய ருமான திரு. ரா.தாமோதரன் கூறுகையில்… இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் இல்லாததே பிழை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு தந்தை தன் பிள்ளைகளை தோளுக்கு மேல் தூக்கி கடவுளை காண செய்கின்றார். கடவுளை கை கூப்பி வணங்கி அப்பா சாமிய நல்லா பாதேன்னு சொல்ற அந்த பிள்ளைகளுக்கு நாம் இருப்பதே சாமி மேல தான்னு அப்போ தெரியாது. நாம் அதை உணரும்போது அவர்கள் நம்மோடு இல்லாமல் தெய்வமாகி போகின்றனர்.  நம் பெற்றோர்கள் நம்மை படிக்க சொல்லியும், ஒழுக்கமாக இருக்க சொல்லி கண்டிப்புடன் வளர்ப்பது நம் நன்மைக்கு என்பது புரியாமல் இன்று மாணவ சமுதாயம் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறது. சிறு வயதிலேயே தங்கள் இஷ்டம்போல்
தனக்கு வேண்டியது கிடைக்கவேண்டும், எந்த கண்டிபும் இல்லாமல் சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் மாணவர்கள் இன்று சிறு சிறு விஷயத்திற்கு கூட பெற்றோர்களிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். அப்படி வெளியேறி போகும் சிறுவர்களின் வாழ்க்கை திரும்பி பார்ப்பதற்குள் தொலைந்து  போவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்வி குறியாக மாறுகின்றது. இன்றைய இளைஞர்களுக்கு எதுவும் சொன்னால் தெரியாது பட்டால் தான் தெரியும். அப்படி பெற்றோர்களின் அகரையை புரிந்து கொள்ளாத மூன்று மாணவர்கள் பட்டு திருந்துவதை பிழை இல்லாமல் சொல்ல வரும் படம் தான் இந்த பிழை என்கிறார் தயாரிப்பாளர். இத்திரைப்படம் சமீபத்தில் சென்னை 17வது சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டது. படத்தை பார்த்த விழா குழுவினர் “பிழை” நாங்கள் எங்கள் மாணவ பருவத்தில் செய்த குறும்புகளையும், பள்ளி பருவதையும்,  நினைவில் கொண்டு வந்து எங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கண் முன்னே நிறுத்தியது என பாராட்டி மகிழ்ந்தனர்.
பிழை படத்தை கண்ட தணிக்கை குழுவினர் இது படம் அல்ல இன்றைய சமுதாயத்திற்கு ஒரு பாடம் என்று பாராட்டி  தணிக்கை குழுவினரால் ‘ U ‘ சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் மூன்று அப்பாக்கள் மற்றும் அவர்களின் மகன்க ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவாக Charly, mime Gopi, George மகன்களாக சின்ன காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசாத், கோகுல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தாமோதரன், கல்லூரி வினோத், இளையா, மணிஷாஜித், அபிராமி, பரோட்டா முருகேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை: பைசல்
ஒளிப்பதிவு: பாகி
பாடல்கள் : மோகன்ராஜ் & தாமோதரன்.
பாடியவர்கள் : வேல்முருகன், கேசவ், பிரியங்கா..
இப்படம் சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சோளிங்கர், திருத்தணி, ஆந்திரா என 8 location-ல் காட்சியாக்கப் பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 3ம் தேதி வெளிவரவுள்ளது.
Turning point Production
Producer : R.Dhamodharan
Director : Rajavel Krishna
Cast
1. Chinna Kaka muttai Ramesh
2. Appa Nasath
3. Gokul
4. Ragavendra
5. Mime Gopi
6. Charly
7. George
8. Kalluri Vinoth
9. Ellaya
10. Manishajith
11. Parota Murugesan
Music : F.S. Fisal
Lyrics : Mohanraja & Dhamodharan
Singers : Velmurugan, kesav, Priyanka
DOP : Baaki
Editor : Ramgopi
Stunt : Danger Mani
Dance : Sathish
PRO : Nikil Murugan
Production manager : Vesti Ganesan