full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

ஜி20 மாநாட்டில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது, “அவர் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் குறித்து விளக்கினார். பாகிஸ்தானில் பெருகி வரும் பயங்கரவாதம் குறித்து கடுமையாகத் தாக்கினார். அப்போது அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் பயங்கரவாதத்தை பயன்படுத்துகின்றன.

அதை ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.’’ என்றார் பிரதமர் மோடி. தனது உரையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஸி ஜின் பிங் ஆகியோர் முன்னிலையில் பேசினார். அதை அவர்கள் உன்னிப்பாக கவனித்தனர். மேலும் 11 அம்ச ஆலோசனைகள் அடங்கிய குறிப்பை ஜி20 நாடுகளின் தலைவர்களிடம் வழங்கினார். அதில் பயங்கரவாத குழுக்கள் குறித்தும், அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நாடுகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.