full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

கலாமுக்காக பாடல், நெகிழ்ச்சியில் கவிஞர்

 
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ‘கலாம் ஆந்தம்’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்படுகிறது. இந்த பாடலை ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், வசந்த் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

இந்த ‘கலாம் ஆந்தம்’-ஐ ‘மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்’-ன் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இப்பாடலின் டியூன் மற்றும் படமாக்கப்பட்ட இடம் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் என்றும், இந்தியாவின் அரிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும் பொழுது தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து கூறியுள்ளார்.

‘கலாம் ஆந்தம்’ மிற்கு கருவாக இருந்தவர் ‘கிரீன் மேன் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் டாக்டர்.கே.அப்துல் கனி ஆவார். கலாம் அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரின் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜூலை 27 அன்று நடக்கவிருக்கும் இதன் திறப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நினைவு மண்டபத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

அப்துல் கலாம் அவர்களின் பேரன்களான ஏ.பி.ஜே.ஷேக் சலீம், ஏ.பி.ஜே.ஷேக் தாவூத், ஜி.கே.மெய்தீன் மற்றும் திரு.அப்துல் கனி இந்த நினைவஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளனர்.