full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா திரை விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா திரை விமர்சனம்

ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா கில்லாரி தயாரித்திருக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா.

இதில் விமலுடன் கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதி டெமில் சேவியர் இசை இயக்கம் என்.ஆர்.ரகுநந்தன் அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா.

சென்னையில் விபத்து ஒன்றில் மரணிக்கும் திருநெல்வேலியில் பிரபலமான பெரிய குடும்பத்தின் தலைவர். அவருக்கு இரண்டு மனைவிகள் என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை இருந்து கொண்டேயிருக்கும், இவரின் மரணம் குடும்பத்தில் மீண்டும் புகைச்சலைக் கிளப்பி யார் கொல்லி போடுவது என்பதில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பெரிய மனிதரின் உடலை எடுத்துக் கொண்டு அமரர் ஊர்தியில் வருகிறார் டிரைவர் குமார் (விமல்). குமாருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் தேவைப்படுவதால் அவசரமாக இதற்கு ஒப்புக் கொண்டு திருநெல்வேலிக்கு உடலுடன் பயணிக்கிறார். வழியில் அமரர் ஊர்தியை வழி மறித்து ஏறிக் கொள்கிறார்.

தெருக்கூத்து கலைஞர் நளினமூர்த்தி (கருணாஸ்). அதன் பின் வீட்டை விட்டு ஒடி வந்த காதல் ஜோடியும் வண்டியில் ஏறிக்கொள்ள, அவர்களை துரத்தி வரும் உறவினர்கள் வழி மறித்து சண்டை போடுகின்றனர். அவர்களுடன் சண்டையிடும் போது பெரியவரின் உடல் காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சியடையும் குமார் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். குமாரிடம் போனில் பேசும் பெரியவரின் குடும்பத்தார்கள் உடனே உடலை எடுத்துவருமாறு வற்புறுத்துகிறார்கள். இந்நிலையில் விபரீதத்தை உணரும் நளினமூர்த்தி குமாருக்கு உதவ முன் வருகிறார். இருவரும் சேர்ந்து அனாதை பிணம் கிடைத்தால் எடுத்து செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த காரியமும் கை கூடாமல் போக, பெரியவரின் குடும்பத்தை எப்படி சமாளித்தார்கள்? பெரியவரின் உடலை கடத்தியது யார்? இரு குடும்பத்தில் யார் கொல்லி போட்டார்கள்? இறுதியில் நளினமூர்த்தி குமாருக்கு என்ன உதவி செய்தார்? குமாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை

அமரர் ஊர்தி ஒட்டுனர் குமாராக விமல் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளை இழந்த சோகம், மனைவியின் பிரசவ செலவு, பெரிய மனிதரின் குடும்பத்தார்கள் ஏற்படுத்தும் அழுத்தங்கள், கலப்பு காதல் ஜோடிக்காக சண்டையிடும் தருணங்கள், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கூத்து பட்டறை கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ், தாய் மீது இருக்கும் பாசத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து, தாய் இறந்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பது, தெருக்கூத்தின் அழிவால் வேலை இல்லாமல் கஷ்டப்படுவது என்று தன்னுடைய உள்மனதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தை சொல்லி புலம்பும் நேரத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறார். அதன் பின் விமலுக்கு உதவ எடுக்கும் திடீர் முடிவு ஒரு பெரிய சிக்கலை தீர்ப்பதற்கு வழிவகுத்தாலும், அவரின் தியாகத்தால் அனைவரையும் கண் கலங்க செய்து விடுகிறார். இறுதியில் தெருக்கூத்தில் கர்ணனின் இறப்புடன் வசனம் பேசி இவரை தொடர்புபடுத்தி காட்டியிருக்கும் விதத்தில் தனித்து நிற்கிறார்.அருமை

இவர்களுடன் விமலின் மனைவியாக மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி என்று அவரவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அசத்தலாக செய்துள்ளனர்.

இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்படத்தின் பலம் ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர்இயக்குனருக்கும் கதைக்கும் பலமாக இருந்து இருக்கிறார்.

விபத்தில் இறந்த பெரிய மனிதரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் அமரர் ஊர்தியிலிருந்து கதைக்களம் தொடங்கி இரண்டு பேர்களின் வாழ்வியலை சுற்றி நடக்கும் சம்பவங்களை, பிரச்சனைகளை, தேவைகளை, நினைத்ததை செய்து முடிக்க துடிக்கும் சொந்தங்களின் பகையை எந்த இடத்திலும் தோய்வு ஏற்படாத வண்ணம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார். இயக்குனர் மைக்கேல் கே ராஜா.