பொங்கல் ரிலீஸ் ஃபைனல் லிஸ்ட்!

News

பொங்கல் 2018 அஜித் – விஜய் படங்களின் ரிலீஸ் இல்லாமல் போனாலும் சூர்யா – விக்ரம் படங்களோடு திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் போல. கூடவே ஆறுதலுக்கு
பிரபுதேவா படமும் வெளியாவது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி.

அரவிந்த் சுவாமி, விமல் அப்புறம் நேத்து வந்த நம்ம “சின்ன கேப்டன்” சண்முக பாண்டி எல்லோரும் ரேஸில் இருந்து விலகிக் கொள்ள, வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகும்
என்பது உறுதியாகியிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஒடுமொத்த திரையரங்குகளில் சரி பாதியை “தானா சேர்ந்த கூட்டம்” லவட்டிக் கொண்டு போய்விட்டதாம். மீதி கிடைத்ததை “ஸ்கெட்ச்” மற்றும் “குலேபகாவலி”
படங்கள் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றன.

பதறிப் போன “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”, “மன்னர் வகையறா” மற்றும் “மதுர வீரன்” குரூப்புகள் விஷப் பரீட்சை வேண்டாம் என பதறியடித்துக் கொண்டு விலகியிருக்கின்றனர்.
பொங்கல் ரிலீஸ் என்று அடித்த போஸ்டர்கள் எல்லாம் இப்போது இம்மாத வெளியீடு என மாற்றப்பட்டுள்ளதாம்.

பொங்கல் முடிந்து குடியரசு தினத்திற்கும் படங்கள் வரிசையில் நிற்பதால், விழி பிதுங்கி நிற்கிறார்கள் மூன்று படக்குழுவினரும்.