பொங்கல், தீபாவளி வந்துவிட்டாலே தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதுவும் தல-தளபதி படங்கள் அந்த நாளில் வெளியானால் அதுதான்
அவர்களுக்குத் திருவிழாவே!. ஆனால் வருகிற பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் ரிலீசாகாவிட்டாலும் விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, பிரபுதேவா, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்த படங்கள் ரிலீசாவதால் “ஹைப்” எகிறியுள்ளது.
அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகைக்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “தானா சேர்ந்த கூட்டம்” ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. “வாலு” படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “ஸ்கெட்ச்”, கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள “குலேபகாவலி” படமும் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இவை மட்டுமல்லாமல் சுந்தர்.சி இயக்கியுள்ள “கலகலப்பு2”, சித்திக் இயக்கியத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”
ஆகிய படங்களும் ரிலீசுக்கான வேலைகளை செய்து வருகிறது.உள்ளது.
இவ்வாறாக பொங்கலுக்கு ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ரிலீசாகும் படங்களுக்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன் உள்ளிட்ட படங்களுக்கு இன்னமும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.
தணிக்கை சான்றிதழ் விரைவில் கிடைக்கும் பட்சத்தில் எந்தெந்த படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பது தெரியவரும்.
எனினும் இதில், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் விரைவில் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே இந்த இரு படங்களும் ரிலீசாவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களுமே 60-70 சதவீத திரைகளை கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே பொங்கல் ரேசில் இருந்து சில படங்கள் பின்வாங்க வாய்ப்பிருப்பது உறுதியாகி இருக்கிறது.