full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாகுபலி 2 படக்குழுவினருக்கு பிரபல நடிகர் பாராட்டு

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள ‘பாகுபலி–2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு, திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘பாகுபலி-2′ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், “’பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.