full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகை ட்வீட்

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு டெலிவிஷன் சேனல்களிலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதைப் பற்றியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது? ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீப்ரியாவிடம் ரசிகர் ஒருவர், “போன தடவை 1000 ரூபாய் கொடுத்தீங்க. இப்போது எவ்வளவு கொடுப்பீங்க என்று வேட்பாளரிடம் மக்கள் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எங்கே போவார்கள்?” என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஸ்ரீப்ரியா, “உங்கள் ஓட்டை ஒரு தடவை விற்று விட்டீர்கள் என்றால் அரசின் தரம் பற்றி கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுகிறீர்கள். அந்த பணம் கணக்கில் வராத பணம்” என்று கூறியுள்ளார்.