full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வெப் தொடராகிறது பிரபாகரன் வாழ்க்கை – விஜய் சேதுபதி நடிக்க அழைப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வெப் தொடராக தயாராக உள்ளது. இந்த தொடரை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வீரப்பன் வாழ்க்கை கதையை வனயுத்தம் என்ற பெயரிலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கை குப்பி என்ற பெயரிலும் எடுத்து வெளியிட்டார். தற்போது வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குகிறார். இதுதொடர்பாக ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியதாவது:-

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்த தொடரில் இருக்கும். சுவிட்சர்லாந்து, டென்மார்க் நாடுகளுக்கு பயணித்து பிரபாகரனோடு நெருக்கமாக பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனை சந்தித்து பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு 6 தடவை சென்று தகவல்களை திரட்டி இருக்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.