full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அப்போ அனுஷ்கா.. இப்போ நிஹாரிகா!!

சென்ற வாரம் வரை “பிரபாஸ், எங்கம்மா சத்தியமா அனுஷ்காவைத் தான் கல்யாணம் செய்துக்க போறார். நீங்க வேணா பாருங்களேன்” என்று கதை அளந்தவர்களுக்கு போர் அடித்து விட்டது போல. இந்த முறை பிரபாஸை, இளம் நடிகை நிஹாரிகாவுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். “என்னப்பா, போன வாரம் தான் அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னீங்களே?” என்று நீங்கள் யாரும் கெட்கக் கூடாது, சரியா?.

“சரி, யாருதான் அந்த நிஹாரிகா?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் வேறு யாருமல்ல, நம்ம விஜய் சேதுபதி ஜோடியா சமீபத்தில் வெளிவந்த “ஒரு நல்ல பார்த்து சொல்ரேன்” படத்தில் நடித்த அந்த துறுதுறு பெண் தான்.

வழக்கமா இப்படி காதல், கல்யாணம் என்று கிளப்பி விட்டால் யாராவது விளக்கம் தந்தே ஆகணுமே!. அதுதானே உலக வழக்கம். அப்படி இந்த புகைச்சலில் தண்ணீரை ஊற்றியிருப்பவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. “இவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இவங்க மேட்டர்ல உள்ள வரார்?” அப்படின்னு நீங்கள் யோசிக்கலாம். அவருக்கு இந்த மேட்டரில் உரிமை இருக்கிறது, அவரின் உறவுக்கார பெண் தான் சம்பந்தப்பட்ட நிஹாரிகா.

“நிஹாரிகா அவரது அடுத்தடுத்த படங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவருக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை” என்று விளக்கமளித்து, விவகாரம் கிளப்பியவர்களை எல்லாம் “வேலையைப் பாருங்கப்பா” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிரஞ்சீவி காரு.

வேலையைப் பாருங்கப்பா!!