full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விலகிக் கொண்ட தேனாண்டாள்.. கைகொடுத்த பிரபுதேவா!

இயக்குநர் ராஜேஷ் படங்கள் என்றாலே இரண்டாவது ஹீரோ சந்தானமாகத் தான் இருப்பார். இப்போது காமெடியனாக இல்லாமல் ஹீரோவாகவே நடிக்கும் சந்தானத்தை இயக்கும் போது கேட்கவா வேண்டும்??
 
ரசிகர்கள் எல்லோரும் இந்தக் கலக்கல் காம்பினேஷனுக்காக காத்திருந்த வேளையில் என்ன காரணமோ, இந்தப் படத்தைத் தயாரிப்பதாய் இருந்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கழண்டு கொண்டிருக்கிறது.
 
எப்படியோ இந்த விவரம் அறிந்த நடிகர் பிரபு தேவா, தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான “பிரபுதேவா ஸ்டுடியோஸ்” மூலம் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.
 
எங்கே கைவிடப்பட்டு விடுமோ என்று நினைத்த இப்படம் மீண்டும் பிரபுதேவாவினால் உயிர்பெற்று, ஜூன் ஜூலை மாதத்தில் படப்பிடிப்புக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.