இந்தியாவின் கிளைகளாக பரவிக்கிடக்கும் கிராமப்புற, ஏழை, எளிய மக்களின் குரல் மோடிக்கு கேட்கிறதா? என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இந்தியாவின் அரசியல் சூழலை நிர்ணயிக்கும் என எதிர்பார்த்த குஜராத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ்,
“அன்பிற்குரிய மோடி அவர்களே.. வாழ்த்துக்கள்.. ஆனால், நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் மேம்பாட்டின் மூலம் வாரிச்சுருட்டும் வெற்றி ஏற்படவில்லையே.
நீங்கள் கூறிய அந்த 150+ தொகுதிகளில் வெற்றி என்னவானது??
சில விஷயங்களை தங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்..
1) உங்கள் பிரிவினைவாத அரசியல் வேலை செய்யவில்லை.
2) பாகிஸ்தான், மதம், சாதி, மக்களை அச்சுறுத்துபவர்களுக்கு ஆதரவு அளிப்பதை விடவும் இந்தியாவில் அதிகப்படியான பிரச்சனைகள் இருக்கின்றன.
3) மிக நுட்பமான கிராமப்புற பிரச்சனைகள் இருக்கின்றன. புறக்கணிக்கப்பட்ட இந்திய கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகளின் குரல் கொஞ்சம் கூடுதலாக ஒலித்திருக்கிறது.
இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஒலித்திருக்கிறது.. மோடி அவர்களே.. உங்களுக்குக் கேட்கிறதா?
என பதிவிட்டுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடி குறித்து பதிவிடும் பதிவுகளில் #JUSTASKING ஹேஷ்டேக்குடன் பதிவிடுவார். அதுபோலவே இந்தப் பதிவிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.