full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் அவர்களே – நடிகர் பிரசன்னா!

வெறும் வாயையே அந்த மெல்லு மெல்லுபவர்கள் தான் பிஜேபி கட்சியினர். அந்த வெறும் வாய்க்கு அவலே கிடைத்தால்.. அதுதான் நடந்தது கவிஞர் வைரமுத்து விவகாரத்தில்.

சில நாட்களுக்கு முன்னால், “நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்த மாதிரி” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்தார்.
அப்போதெல்லாம் புளங்காகிதம் அடைந்தவர்கள், தனியார் பத்திரிக்கையொன்றில் “ஆண்டாள்” குறித்து எழுதிய கட்டுரைக்காக அவரை
குதறித் தள்ளி விட்டார்கள்.

அந்த கட்டுரையில் பல ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களைக் காட்டியிருந்தார் கவிஞர் வைரமுத்து. அதில் ஒன்றில் அமெரிக்க ஆராய்ச்சி பேராசிரியர் ஒருவரின் மேற்கோள் தான் பயங்கரமான புயலை கிளப்பியிருக்கிறது தமிழகத்தில்.

கடந்த பத்து நாட்களாக அதற்காக வைரமுத்துவை இந்து அமைப்புகள் மோசமான முறையில் விமர்சித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து தரப்பிலிருந்து அதற்கான விளாக்கம் அளித்த பிறகும் யாருமே அதை ஏற்பதாக இல்லை.

அதிலும் நித்யாநந்தா ஆசிரமத்தில் சன்யாசிகள் என்ற பெயரில், கேட்க கூசும் அளவிற்கு கண்ணாபிண்ணாவென்று பேசிய வீடியோக்கள் வைரலானது. இதற்கு இந்து மதக் காப்பாளர்களே எதிர்ப்பு காட்டாத நிலையில், நடிகர் பிரசன்னா தைரியமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அதில், “உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்பட வேண்டிய
இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு” என்று பதிவிட்டுள்ளார்.