full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா மற்றும் சினேகா !!!

தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 10பேருக்கு உதவினார் அவர் செய்த நற்பணியை பார்த்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவுக்கு நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார். அதன்படி பிரசன்னா மற்றும் சினேகா நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவும் வகையில் இன்று நடந்த நிகழ்வில் 2-லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா , சினேகா ஆகியோர் செயலில் இறங்கி செய்துள்ள இந்த நற்ச்செயல் பாராட்டுக்கூரிய ஒன்றாகும். இந்நிகழ்வு விஷால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட ” Friends Of Farmers ” எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் நடிகர் விஷாலின் மேலாளர் முருகராஜ் , நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி , அன்னாலையா ஹோட்டல் ( நுங்கம்பாக்காம்) மற்றும் பிராண்ட் அவதார்

உதவி பெற்ற விவசாயிகளின் பெயர்கள் :-

பி. பழனியாண்டி

வி.மூக்காயி

என்.தங்கராஜ்

கே.ராஜி

ஆர். வெங்கடாசலம்

பி. கணேசன்

ஜி. மகாதேவன்

ஆர்.சதாசிவம்

பி.சிலம்பாயி /பழநிசாமி

ஜான் மைகேல் ராஜ்.