‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து ஹரீஷ் கல்யாண்..

Press Meet
0
(0)

 

 

பனி படரத்தொடங்கியிருக்கும் இந்த இதமான தட்ப வெட்ப நிலையில் நெஞ்சுக்கு நெருக்கமாக அமையக்கூடிய நகைச்சுவை கலந்த காதல் படத்தைப் பார்ப்பதைத் தவிர வேறு எது அழகாகவும் அற்புதமான அனுபவமாகவும் இருக்க முடியும்? ஆம்… எதிர்வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ முழு நீள பொழுதுபோக்குச் சித்திரமாக அனைத்து தரப்பையும் மகிழ்விக்கவிருக்கிறது. இது குறித்து படக்குழு முழுவதும் அதிகபட்ச உற்சாகத்தில் திளைக்க, நாயகன் ஹரீஷ் கல்யாண் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன? மற்றவர்களைக் காட்டிலும் இன்னும் அதிக  உற்சாகத்தில் இருக்கும் அவர், ‘தனுசு ராசி நேயர்களே’ குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

“திரும்பத் திரும்ப நான் ஒரே விஷயத்தை சொல்வதுபோல் தோன்றினாலும் உண்மை அதுதானே… ‘தனுசு ராசி நேயர்களே’ எனக்கு முழுமையான முதல் தரமான தனித்துவம் மிக்க அனுபவத்தைத் தந்தது. நகைச்சுவை பலமாக அமைந்த வித்தியாசமான கதைக்களம் இது. ஒரு நல்ல காதல் கதை என்பது ரம்யமான காதல் காட்சிகள் மட்டுமின்றி, குடும்ப ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் நிரம்பியதாக இருக்க வேண்டும். தனுசு ராசி நேயர்களே இவ்வாறு அமைந்ததற்கு இயக்குநர் சஞ்சய் பாரதிதான் காரணம். காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமெண்ட்ஸ் என்று அனைத்து கூறுகளும் நிரம்பிய கதையாக இதை அவர் வடிவமைத்திருந்தார். நகைச்சுவை மிக்க காதல் படங்களுக்கு சில விசேட தகுதிகள் தேவைப்படும். அதாவது நகைச்சுவை, காதல் மற்றும் சென்டிமெண்ட் சரியான விகித்த்தில் கலக்கப்பட்டிருந்தால்தான் ரசிகர்களை முறையாக ஈர்க்கும். அந்த வகையில் இயக்குநர் சஞ்சய் பாரதி மிகச் சிறப்பாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.

என்னுடன் இணைந்து நடித்த டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் இருவரும் தாங்கள் ஏற்ற வேடங்களை அதிக பட்ச அர்பணிப்பு உணர்வுடன் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கே.பாலசந்தர் சாரின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் ரேணுகா மேடம் இப்படத்தில் எங்களுடன் இணைந்து நடித்திருப்பது எங்கள் குழுவுக்கே பேரானந்தமாக இருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக பல ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் பண்பட்ட நடிகர்களான பாண்டியராஜன் சார், மயில்சாமி சார், சார்லி சார் ஆகியோருடன் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பது என்னால் என்றென்றும் மறக்க முடியாது. எல்லாப் படங்களையும்போல் ஜிப்ரான் இந்தப் படத்திலும் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த முடியாது. ஜிப்ரான் தனது இசை மூலம் இந்தப் படத்துக்கு அழகூட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் ஸ்க்ரிப்ட்டின் மீது நம்பிக்கை வைத்து, அதற்கு செயல் வடிவம் கொடுத்த தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு என்  இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் தனுசு ராசி நேயர்களே ரசிகர்களை முழு திருப்தியடையச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட முழுமையான பொழுதுபோக்குப் படமாகும். படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொணடு வாங்கி சிறப்பான முறையில் வெளியிடும் ஃபைவ் ஸ்டார் செந்தில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் யோகிபாபு, முனீஷ்காந்த், சங்கிலி முருகன், டேனி ஆனியல் போப், டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, குபேந்திரன் படத்தொகுப்பை கவனித்தருக்கிறார். உமேஷ் ஜே.குமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.