full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிரைம் வீடியோ தனது ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை அறிவித்தது.

பிரைம் வீடியோ தனது ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை அறிவித்தது.

 

இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது

இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் , 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யோகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,

மும்பை, இந்தியா, 07, 2024 — இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்தது . கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ்(Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா ஆல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹ்யூமர் த்ரில்லரில் நவீன் சாந்ரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடவிருக்கும் இந்த திரில்லர் பெருமையோடு அறிவிக்கிறது. மர்மங்கள் மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த ஒன்பது எபிசோடுகளுடனான இந்த சீரீஸ் இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழிலும் மற்றும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யோகமாக ஸ்ட்ரீம் செய்யப்படவிருக்கிறது. இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு வெறும் ₹1499 செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்
2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த இயற்கைக்கு மாறான அதேசமயம் மனதைக் கவரும் டார்க் ஹ்யூமர் திரில்லர் காலம் நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி அதிலிருந்து விடுபட போராடும் கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா ஆகிய நான்கு பள்ளி நண்பர்களின் சாகச வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. சவால் மிகுந்த சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் வழி நெடுக தவிர்க்க முடியாத அடையாளங்களை விட்டு, செல்லும் வழியில் கேள்விக்குரிய தேர்வுகளை மேற்கொண்டு லாகவமாக கடந்து செல்லும் அவர்களின் இந்தப் பயணம் இறுதியாக எதிர்பாராத விதமாக தன்னைத் தானே அறிந்து உணரும் பாதைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.

“பிரைம் வீடியோவில் நாங்கள், ஆழமற்ற மேற்போக்காக சொல்லப்படும் கதைகளுக்கும் அப்பால் சென்று எங்கள் பார்வையாளர்களின் அனைத்து அனைத்து உணர்வுகளையும் துல்லியமாகத் தாக்கி அவர்களின் ஆர்வைத்தைத் தூண்டும் அதிகாரபூர்வமான கதைகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம். திரைப்படத்தின் இறுதியில் நன்றி தெரிவிக்கும் காட்சிக்குப் பிறகும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் வகையிலான பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழலை கச்சிதமாகக் காட்சிப்படுத்தும் கதைகளை ஊக்குவித்து அவற்றை வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் ,” என்று திரு நிகில் மதோக், தலைவர் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா, கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “பிராந்தியம் சார்ந்த கதைகளை குறிப்பாக தமிழ் உள்ளடக்கங்களை சொல்வதில் எங்களுக்கிருந்த தீராத ஆர்வமே சமீபத்தில் சுஷால்- தி வோர்டெக்ஸ், வதந்தி ஃபேபிள் ஆஃப் வேலோனி மற்றும் இன்ஸ்பெக்டர் ரிஷி ஆகியவற்றின் பிரமாண்டமான வெற்றிக்கு வழிவகுத்து எங்களின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது. கலாச்சார ரீதியாக ஆழம் வரை ஊடுருவிசென்று வேரூன்றிய இந்தக் கதைகள், இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களின் மனதோடு ஒத்திசைந்து எதிரொலிக்கும் வளமான மற்றும் அழுத்தமான கலைப்படைப்புக்களை உருவாக்க எங்களுக்கு உதவியுள்ளன. எங்களின் சமீபத்திய தொடரான ஸ்னேக்ஸ் & லேடர்ஸ் மூலம், எங்கள் தொகுப்புக்களை மேலும் விரிவடையச் செய்து எங்கள் உள்ளடக்க இயக்க சுழற்சியை வளமாக்கிக் கொள்வதில் நாங்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளோம்”

இந்தத் தொடரை தொகுத்து நிர்வகித்த கார்த்திக் சுப்பராஜ், கூறினார் “ஸ்னேக்ஸ் & லேடர்ஸ் இல் பணிபுரிந்ததில் நான் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தேன். மற்றும் இந்த செயல்திட்டத்தில் பிரைம் வீடியோவுடன் கூட்டிணைந்து பணிபுரிய கிடைத்த வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நான்கு நண்பர்களின் கதைக்கு உயிரூட்டிய அனுபவம் நம்பவே முடியாத அளவு உற்சாக்கத்தை அளித்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பதின்பருவ வயதினரின் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் தனித்துவம் மிக்க ஆளுமை மற்றும் சிக்கலான உறவுகளை வெளிப்படுத்துகிறது. அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் மர்மத்தை விடுவிக்க முயற்ச்சிக்கும் அவர்களின் இந்தப் பயணம் பார்வையாளர்களை தொடக்கத்திலிருந்து இறுதி வரை கவர்ந்திழுத்து கட்டிப்போடும்நட்பின் உணர்வு பூர்வமான நுணுக்கங்கள், தனிநபர் வளர்ச்சி மற்றும் பார்வையாளர்காலோடு ஒத்திசைந்து எதிரொலிக்கும் அர்த்தமுள்ள உணர்ச்சிப் பிணைப்புகள் மற்றும் பாடங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தூண்டுவதோடு பொழுதுபோக்காகவும் இருக்கக் கூடிய ஒரு கதையை உருவாக்குவதை எங்கள் கிரியிலாக்காக்க் கொண்டிருந்தோம். . பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத் தொடர் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்”.