full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஒரே நாளில் உலக சாதனை – கலக்கிய புதுமுகம்!

கடந்த வாரம் வரை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்றால் ஒருவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்றோ நிலைமை அப்படியே தலைகீழ். டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் அம்மணி தான். அப்படி என்ன தான் செய்துவிட்டார் இவர்? ஒன்றுமில்லை, ஒரே ஒரு கண்ணசைவு தான்.

“ஒரு அடார் லவ்” என்கிற மலையாள படத்தின் “மாணிக்ய மலராய பூவி” என்ற சிங்கிள் சாங் வெளியானதிலிருந்து எங்கேயும் பிரியா, எதிலேயும் பிரியா. அதுவும் அவர் கண்ணடித்து சிரிக்கிற அந்த கிளிப்பிங் மட்டும் தான் இப்போது வைரலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. மீம்களாக பறந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் அதிகமான ஃபாலோயர்ஸை பெற்ற பிரபலமாகியிருக்கிறார் பிரியா. இதற்கு முன்பு இந்த சாதனையை அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கெயில் ஜென்னரும் (2018), கிரிஸ்டியானா ரொனால்டோவும் (2017) செய்திருக்கிறார்கள்.

சாதாரண ரசிகர்களே இப்படி குதூகலிக்கையில், தமிழ் டைரக்டர்ஸ் இந்நேரம் கேரளாவிற்கு டிக்கெட்டே போட்டிருப்பார்கள். சீக்கிரம் தமிழுக்கு வாம்மா பிரியா.