மஞ்சு மனோஜ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” !

News
0
(0)

 

 

 

ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அதிரடியான  அவதாரத்தில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க  வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள அவரது புதிய படம்,  அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.

 

 

இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.  மெகா பவர் ஸ்டார் ராம்சரண்  விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க,  அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க  படப்பிடிப்பு  துவக்கப்பட்டது.  தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமைகளான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்‌ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.

 

 

 

முழு இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் “அஹம் பிரம்மாஸ்மி” படத்தை இயக்குநர் ஶ்ரீகாந்த் N ரெட்டி இயக்குகிறார். நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் மஞ்சு மனோஜ் ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில்  வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில்  நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவங்களை வெளிப்படுத்தும் மஞ்சு மனோஜின் தோற்றம் அனைவரையும் ஈர்த்து  தீயாக பரவி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தை மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி MM Arts நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் இப்படத்தினை வழங்குகிறார்கள்.

நடிகர்கள் குழு

மஞ்சு மனோஜ்
ப்ரியா பவானி சங்கர்
தனிகேல்லா பரணி
முரளி கிருஷ்ணா
சமுத்திரகனி
ரகு பாபு
ராஜிவ் கனகலா
சுதர்ஷன் ராம் பிரசாத்
சிண்டு பிரதீப் ராவத்
ஶ்ரீகாந்த் ஐயங்கார்
கிரி
ஜம்மக் சந்த்ரா
விஸ்வநாத்
அர்ஜுனன் நந்தகுமார்
பெசண்ட் ரவி
அன்னபூர்ணா
வினயா பிரசாத்
வர்ஷா
ஶ்ரீ சுதா
ஐஸ்வர்யா

 

 

 

தொழில் நுட்ப குழு விபரம்
கதை,திரைக்கதை,வசனம், இயக்கம் –  ஶ்ரீகாந்த் N ரெட்டி
இசை – அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு – சன்னி குருபாதி
பாடல்கள் – ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம்
படத்தொகுப்பு – தம்மிராஜு
கலை இயக்கம் – விவேக் AM
சண்டைப்பயிற்சி இயக்கம் –  பீட்டர் ஹெய்ன்
கூடுதல் வசனங்கள்-  திவ்யா நாரயணன், கல்யாண் சக்ரவர்த்தி
விளம்பர வடிவமைப்பு – தீபக் போஜ்ராஜ்
இணை இயக்கம் – தொட்டம்புடி சுவாமி
நிர்வாக தயாரிப்பாளர் – வெங்கட் சல்லகுல்லா.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.