உலகின் நாட்டாமையாக விளங்கும் அமெரிக்காவில் சமீபமாக அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த முறை நியூயார்க் பகுதியில் உள்ள மன்ஹட்டன் பகுதியில் படுபயங்கரமான தீவிரவாத தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் பள்ளி வாகனம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை விட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் பத்திற்கும் மெற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது.
தாக்குதல் நடந்த மன்ஹட்டன் பகுதியில் தான் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தங்கியிருக்கும் வீடு உள்ளது. அமெரிக்காவில் தற்போது புகழ்பெற்ற ”குவாண்டிகோ இன் அமெரிக்கா” சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதற்காக நியூயார்க்கிலேயே தங்கியிருக்கும் அவர், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தான் தப்பித்த செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது,
“மிகவும் அதிர்ச்சியான இந்த சம்பவம் என் வீட்டிற்கு மிக அருகிலேயே நடந்துள்ளது. போலீஸ் வாகனங்களின் சைரன் சத்தம் கேட்டே தாக்குதல் நடந்திருப்பதை அறிந்தேன். இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.