மார்ச் 2-ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த போது, பலரும் இது வழக்கமான ஒன்றுதான் இரண்டொரு நாளில் வாபஸ் ஆகி விடும் என்றே நினைத்தார்கள். ஆனால் இந்த முறை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பின்வாங்கப் போவதில்லை என்கிற முடிவோடு தயாரிப்பாளர் சங்கம் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.
படங்கள் மட்டுமல்ல, சினிமா சம்பந்தமாக எந்த விழாவும் நடக்காது என அறிவித்ததோடு மட்டுமல்லாமல், போஸ்டர் கூட ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட அத்தனையையும் அப்படியே கடைபிடித்து வருகிறார்கள் அனைத்து சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து.
அதனால் இந்த முறை எப்படியும் கியூப் கட்டணம் குறைக்க்கக் கூடிய வாய்ப்பு நிலவுவதால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக நின்ற தயாரிப்பாளர்கள் கூட இப்போது ஆதரவு தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனால் எல்லா படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. அப்படி படப்பிடிப்பு ரத்தாகும் பட்சத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 62”, சூர்யாவின் “என்ஜிகே”, அஜித் நடிக்க இருக்கும் “விஸ்வாசம்” ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் ராத்தாகும் வாய்ப்பு அதிகரித்திருக்கிரது.
ஏற்கனவே, தீபாவளி ரிலீசுக்காக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி வரும் இந்த படங்களின் தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போகுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறார்கள் தல-தளபதி மற்றும் சூர்யா ரசிகர்கள்.