அதிகபடியான டிஜிட்டல் க்யூப் கட்டணம், ஆன்லைன் புக்கிங் கட்டணம் உட்பட பல பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய திரப்படங்கள் வெளியீட்டு நிறுத்தம், அனைத்து பட வேலைகள் நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது.
இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் டிஜிட்டல் க்யூப் கட்டணம் சம்பந்தமாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடுவதற்காக AEROX என்ற டிஜிட்டல் புரொவைடர் நிறுவனம் முன்வந்துள்ளது. DCL APPROVEL பெற்ற இந்நிறுவனத்தினருடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இப்போதுள்ள கட்டணத்தில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான கட்டணத்தில் இந்நிறுவனம் சர்வீஸ் செய்ய முன் வந்திருக்கும் நிலையில் 40-க்கும் மேற்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் இவர்களுடன் ஒன்றிணைந்து திரைப்படங்களை வெளியிட முன் வந்திருக்கிறார்கள்.
இதனால் இந்த திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்றும், வரும் நாட்களில் மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் இந்நிறுவனத்துடன் கை கோர்த்து திரைப்படங்களை திரையிட முன் வருவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.