ப்ராஜெக்ட் கே’ படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் பிரபாஸ்

cinema news First Look

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸின் புதிரான ஃபர்ஸ்ட் லுக்கை , சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுக்கு முன்னதாக வெளியிட்டிருக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் புனைவு கதை திரைப்படமான ‘ப்ராஜெக்ட் கே’ எனும் திரைப்படத்தினை பற்றிய புதிய தகவலை வெளியிட்டு வைஜெயந்தி மூவிஸ், மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களின். கற்பனை திறனை விரிவடைய செய்திருக்கிறது. கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து சான் டியாகோவின் காமிக்- கானில் பங்கேற்கும் முதல் இந்திய திரைப்படமாக மாற்றம் அடைந்த பிறகு, ஒரு நாள் முன்னதாக தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.

இதனால் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், தற்போது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. செஃபியா டோன் காட்சி பின்னணியில் வசீகரிக்கும் தோற்றத்தில் கதையின் நாயகனான பிரபாஸ் ஒரு புதிரான அவதாரத்தை அணிந்து தோற்றமளிக்கிறார். மர்மமும், கவர்ச்சியும் கலந்து நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அந்த தோற்றமானது.. படத்தின் உயர்தரமான தயாரிப்பிற்கு சான்றாக திகழ்கிறது. மேலும் இது சமூக ஊடகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களிடையே சூறாவளி போல் உற்சாகத்தை தூண்டி இருக்கிறது.

‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அறிமுகத்தை சான் டியாகோ காமிக்-கானில் மதிப்புமிக்க ஹெச் ஹாலில் வெளியிடப்படவுள்ளது. இந்த பிரத்யேக நிகழ்வின் போது படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படைப்பாளிகள் வெளியிடுவதால் மறக்க முடியாத பயணத்திற்காகவும், அனுபவத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் அமிதாபச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த நட்சத்திர நடிகர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் இயக்குநர் நாக் அஸ்வினின் திறமை ஆகியவை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இணையற்ற சினிமா அனுபவத்தை உண்டாக்கும் என்பது உறுதியாகிறது.