full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாகுபலிக்கு அடுத்தபடியாக புலி

மலையாளத் திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு, 150 கோடி வசூல் சாதனை செய்த படம் “புலிமுருகன்”.
மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தைத் தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது.

பாடல்கள் – சினேகன், ஆர்.பி.பாலா, ஒளிப்பதிவு – ஷாஜிகுமார், இசை – கோபிசுந்தர், எடிட்டிங் – ஜான், ஸ்டன்ட் – பீட்டர் ஹெய்ன், கதை, திரைக்கதை – உதயகிருஷ்ணா.
இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் – வைஷாக், தயாரிப்பு – டோமிச்சன் முலக்குப்பாடம்.

இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா. புலிமுருகன் படம் வருகிற 16 ம் தேதி தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது புலிமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.