டாக்சி 4777-க்கு அடுத்து புறா பறக்குது!

News
0
(0)

மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி  4777 படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல் என்பது அமுதசுரபி மாதிரி.. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன.. அந்தவகையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்துள்ளார் இலட்சுமி காந்தன்.

முதல்காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான். இதுதான் படத்தின் கதை. இந்த காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான் திரைக்கதையில் வித்தியாசப்படுத்தி காட்ட இருக்கிறாராம் இலட்சுமி காந்தன். 

இந்தப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆர்யா, ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், VJ முரளி  என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில்  நடிக்கிறார்கள்.. அது எதற்காக என்பது சஸ்பென்ஸ்..

இந்தப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.