full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

புஷ்பா புருஷனால் காணாமல் போன பரோட்டா சூரி

காமெடி நடிகர்கள் எல்லோரும் தற்போது ஹீரோவாக மாறிவரும் நிலையில், பரோட்டா சூரி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக பணியாற்றி வரும் நிலையில், தன்னை இந்தளவுக்கு உயர்த்தியவர்களை நினைவுகூறும் விதமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘சினிமாவில் நான் இன்று பெரிய காமெடியனாக உயர்ந்ததற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம். அவரை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். ஆனால், சமீபத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் நான் நடித்த ‘புஷ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரம் தற்போது புரோட்டா சூரியை மறக்கடித்துவிட்டது.

காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோக்களாக மாறி வந்தாலும் எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணம் தற்போது வரை இல்லை. நயன்தாராவுடன் போன்ற முன்னணி நடிகைகளுன் டூயட் பாட ஆசைதான். ஆனால், அந்த நடிகைகள் நம்முடன் டூயட் பாட ஆசைப்பட்டால் தான் முடியும்.’ என்றார்.