full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பி வி சிந்து பகிர்ந்த மோசமான அனுபவம்

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 முறை பதக்கம் வென்ற மற்றும் உலக தர வரிசையில் 2ம் இடம் வகிப்பவரான பி வி சிந்து தனக்கு விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் பற்றி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விமான நிலைய பணியாளரான அஜீதேஷ் என்னிடம் மிக மோசமான மற்றும் கடுமையான முறையில் நடந்து கொண்டார். விமான பணிப்பெண் ஆசிமா அவரிடம் பயணியிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆனால், ஆசிமாவிடமும் அவர் கடுமையுடன் நடந்து கொண்டுள்ளார். இதுபோன்ற மக்கள் இண்டிகோ போன்ற ஒரு மதிப்பு நிறைந்த விமான நிறுவனத்தில் பணிபுரிவது அதன் மதிப்பினை அழித்துவிடும் என தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து, மும்பைக்கு 4ந்தேதி 6ஈ 608 விமானத்தில் பறந்து செல்லும்பொழுது அஜீதேஷ் என்ற விமான பணியாளரால் மோசமான அனுபவம் ஏற்பட்டது என்பதை தெரிவிப்பதற்கு வருந்துகிறேன் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிந்து, போட்டிகளில் பங்கேற்பதற்கான தனது பேட்டுகள் கொண்ட பையை சுமந்து செல்வது வழக்கம். விமான பணியாளர் அஜீதேஷ், பையை வைத்து விட்டு செல்லும்படி சிந்துவிடம் கடுமையுடன் கூறியுள்ளார். சிந்துவுடன் அவரது தந்தை ராமண்ணாவும் சென்றுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, பையில் போட்டிக்கான பேட்டுகள் உள்ளன. அதனால் அதனை கவனமுடன் கொண்டு செல்லும்படி சிந்து கூறியுள்ளார். ஆனால் அந்த பணியாளர் கடுமையுடன் நடந்து கொண்டார். அவரை தடுக்க முயன்ற விமான பணிப் பெண்ணிடமும் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். ஒரு பெண்ணிடம் இதுபோன்று ஒருவர் நடந்து கொள்ள கூடாது. அதனால் சிந்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் மனவருத்தமடைந்து உள்ளார் என கூறியுள்ளார்