Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் – Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார். #ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர் இயக்குநர் R.கண்ணன்.தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

