full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

13 வருட சினிமா அனுபவம் பற்றி ராய்லட்சுமி

‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. இந்தி வரை சென்றிருக்கும் இவர் திரை உலகில் காலடி வைத்து 13 ஆண்டுகள் ஆகின்றன.

தனது சினிமா அனுபவம் பற்றி ராய்லட்சுமி, “பெரிய ஹீரோ படத்தில் அறிமுகமாகி, பிரபலமாக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் 50-வது படத்தில் நாயகியை மையமாக வைத்து ஒரு கதையில் நடிக்க விரும்பினேன்.

நான் எதிர்பார்த்தப்படி கதை கிடைத்தது. எனவே தான் ‘ஜூலி-2’ படத்தில் நடித்தேன். எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை என்று நான் கவலைப்படவில்லை. இந்தி பட உலகில் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்த படம் மூலம் இந்தி படங்களில் நடிப்பதற்கான கதவுகள் இப்போது திறந்து இருக்கின்றன.

நான் தனி ஆள் இல்லை. எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் என் சகோதரி தான். எனது குழந்தை பருவத்தில் இருந்தே அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். சினிமா துறைக்கு நான் வந்தபிறகு எனக்கு முதுகெலும்பு போல ஆகிவிட்டார். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஒரு போன் செய்தால் போதும் என் சகோதரி பார்த்துக்கொள்வார்.” என்றார்