சமயம் பார்த்து அடிக்கும் ராதாரவி!

News Uncategorized

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்ததும் போதும், வேட்புமனு தாக்கல் செய்ததும் போதும்.. தயாரிப்பாளர் சஙத்திற்குள் புகைச்சல் கிளம்பிவிட்டது. இயக்குநரும் தயாரிப்பாளருமாகிய சேரன் தலைமையில் சில தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டிடத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும், இல்லையேல் தேர்தலில் போட்டியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தை மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

எஙளது கோரிக்கையை விஷால் ஏற்கும் வரை, சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர்களின் இந்த போராட்டத்திற்கு நடிகர் ராதா ரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் ராதாரவி தெரிவித்திருப்பதாவது,

“விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி. நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அந்த இடத்தை கெடுத்துவிடுவார். அரசியல் என்பது சாதரணமானதல்ல, ரொம்பவும் கஷ்டமானது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவையானவற்றை அவர் செய்ய வேண்டும் என்பதே விஷாலுக்கு தனது அறிவுரை” என்றார்.