full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

போனில் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே !

தேவ் டி என்ற படத்தின் ஆடிஷனுக்காக நான் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

 

 

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். நிர்வாணமாக நடிப்பது, அரை நிர்வாண போஸ் கொடுப்பது என்று சினிமாவை அதிர வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறும்படத்திற்காக இவரது நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்மையில் தென்னிந்திய நடிகரை கன்னத்தில் அறைந்ததாகவும் செய்திகள் வெளியாகியது.

 

ராதிகா ஆப்தே

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் தேவ் டி என்ற படத்தில் நடிப்பதற்காக நடந்த ஆடிஷனில் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது, அவர் புனேயில் இருந்ததாகவும், அதற்குப் பிறகு அவர் போன் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.